வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

0 1599
வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா, 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், வேலூர் மாநகராட்சியில் போட்டியிட்ட திருநங்கை கங்கா 2 ஆயிரத்து 131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர், 2 ஆயிரத்து 116 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். வெற்றி பெற்ற கங்காவுக்கு, திருநங்கைகள் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments