காருக்குள் அரபிக்குத்து காதலியுடன் சிக்கிய காவலருக்கு கும்மாங்குத்து..! விரட்டி விரட்டி தாக்கிய கணவர்
நெல்லை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கதிர் வீச்சு அபாயம் உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அடுத்தவர் மனைவியுடன் சிக்கிய போலீஸ்காரரை, அந்தப் பெண்ணின் கணவர் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிர் வீச்சு அபாயம் உள்ள பகுதியில் தடையை மீறி சில கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதனை நோக்கி ஆவேசமாக சென்ற மாரிமுத்து என்பவர் காரின் கதவை வேகமாக திறந்தார்.
உள்ளே அமர்ந்திருந்த அவரது மனைவியை தலைமுடியை பிடித்து வெளியே இழுத்து தாக்கிய நிலையில் அவருடன் காரின் ஓட்டுனர் இருக்கையில் சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் முருகன் என்பவரை மற்றொருவர் மடக்கிப் பிடித்தார்.
மனைவிக்கு விழுந்த பளார் அறைகளை தொடர்ந்து மனைவியின் காதலனான காவலர் முருகனை மடக்கிப்பிடித்து கும்மாங்குத்து குத்தினார்.
உடன் வந்த உறவினர்கள் தடுத்த நிலையில் அவர், காவலர் முருகனையும் , தனது மனைவியையும் , மாறி மாறி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
காருக்குள் என்ன செய்து கொண்டிருந்தோம் ? என்பதை இருவரும் விளக்குவதற்கு முன்பாக அவர்கள் இருவரையும் விரட்டி விரட்டி தாக்கினார்.
அங்குள்ளவர்கள் விசாரித்த போது மருத்துவமனையில் பணி புரியும் காவலர் முருகன் என்பவர் தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டு காருக்குள் ஒன்றாக இருந்ததாகவும் அதனை கையும் களவுமாக பிடித்த ஆத்திரத்தில் தனது மனைவியையும், காவலர் முருகனையும் தாக்கியதாக மாரிமுத்து தெரிவித்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரது மனைவியையும், காவலரையும் மீட்டு அங்கு வந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போலீசார் . அடிவாங்கிய பெண்ணும், காவலர் முருகனும் காயம் அடைந்திருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதனை தொடர்ந்து இருவரையும் தாக்கியதாக அந்தப்பெண்ணின் கணவர் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இது போன்று தவறுகள் நடந்தால் போலீசாரிடம் புகார் அளிக்காமல், தாக்குதலில் ஈடுபடுவது தவறு என்பதால் அவரை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments