ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் தாக்குதல் நடந்த வந்தபோது கைது

0 1890

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த தீவிரவாதியை சுற்றிவளைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஹந்தவாரா பகுதியில் தீவிரவாத நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ராணுவம், போலீசார், மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை நடந்த பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற ஒருவனை விரட்டிப் பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில் கைதானவன் Ubaid Bashir Wani என அடையாளம் காணப்பட்டதாகவும், ஹந்த்வார பகுதியில் தாக்குதல் நடத்த வந்ததாக தெரிவித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவனிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments