பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரி ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்படுகிறது என்றும், இந்தக்குழுவினர் புகார்கள் குறித்து விசாரித்து, உரிய பரிந்துரைகளை நிபுணர்கள் குழு 8 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும் என உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான ரிட் மனுக்களை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நாளை மீண்டும் விசாரிக்கிறது.
Comments