ஆசிரமத்தில் கல்லூரி மாணவி தற்கொலை.. சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுத பெற்றோர்.!

0 3950

திருவள்ளூர் அருகே ஆசிரமம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரிடம் கதறிய நிலையில், சம்மந்தப்பட்டவர் சாமியாரே அல்ல, அவர் வைத்தியர் என்று கூறி அவருக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் எஸ்.பி.அலுவலகத்தில் முறையிட்டனர்.

வெள்ளாத்துக்கோட்டையில் ஆசிரமம் நடத்தி வரும் முனுசாமி என்பவரிடம் நாகதோஷம் கழிப்பதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

மாணவியின் தற்கொலைக்கு முனுசாமிதான் காரணம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகம் சென்ற மாணவியின் பெற்றோர் காவல்துறையினரின் கால்களில் விழுந்து கதறி அழுதனர்.

இதனிடையே முனுசாமிக்கு ஆதரவாக திருவள்ளூர் எஸ்.பி அலுவலகம் சென்ற 30க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் எஸ்.பி வருண்குமாரை நேரில் சந்தித்து, முனுசாமியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர் சாமியார் இல்லை, வைத்தியர் என்றும் பல ஆண்டுகளாக பலரது உயிரை காப்பாற்றி வந்துள்ளார் என்றும் அவர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments