கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்

0 2105

12 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான கோர்பேவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்த தடுப்பூசியை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளது.

கோர்பேவேக்ஸ் தடுப்பூசி கொரோனா வைரஸில் உள்ள ஸ்பைக் புரோட்டின் அமைப்பை எடுத்துத் தயாரிக்கப்பட்டதாகும்.

28 நாட்களுக்கு இடையே 2 டோஸ்கள் செலுத்தும் வகையில் கோர்பேவேக்ஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது நாட்டில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments