சென்னையில் குளிர்பான குடோனில் காலாவதியான Sprite, Coco cola, fanta, limca உள்ளிட்ட குளிர்பானங்களை பறிமுதல் செய்த உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள்.!

0 2573

சென்னை புளியந்தோப்பில் தனியாருக்கு சொந்தமான குளிர்பான குடோனில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காலாவதியான Sprite, Coco cola, fanta, limca உள்ளிட்ட குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பழைய பின்னிமில் உள்ளே செயல்பட்டு வரும் சென்னை ட்ரேடர்ஸ் என்ற குளிர்பான கிடங்கில் இருந்து தான், சென்னையின் பல்வேறு இடங்களுக்கு குளிர்பானம் சப்ளை செய்யப்படுகிறது.

இங்கு, அருகருகே இருந்த இரண்டு குடோன்களில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையினான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில், 20 முதல் 30 குளிர்பான வெளிநாட்டு பாட்டில்கள் காலாவதியாகியிருந்த நிலையில், காலாவதியான குளிர்பானங்களையும் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்களின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments