தீவன மோசடி வழக்கில் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை

0 2526

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 5ஆவது வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சராக அவர் பதவி வகித்த போது, கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகளை சிபிஐ பதிவு செய்த நிலையில், 4 வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றார்.

சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இந்நிலையில், கால்நடைத்துறைக்கு அரசு கருவூலத்தில் இருந்து 139 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கில் லாலுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 60 லட்ச ரூபாயை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அபராதமாக விதித்து தீர்ப்பளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments