தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1555

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழையும், நாளைய தினம் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

23-ந் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சியில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 24-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 25-ந் தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments