பட்டப்பகலில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடன் கைது

0 2233

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே பட்டப்பகலில் வீடு ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கொள்ளையன் ஒருவன் தனது வாகனத்தை போல எடுத்து ஓட்டிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

பேய்குளம் பஜார் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை பூட்டாமல் அப்படியே நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அவர் வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணமல் போயிருந்ததைக் கண்டு, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளையன் தனது சொந்த வாகனத்தை போல அந்த வாகனத்தை எடுத்து ஓட்டிச்சென்றது தெரியவந்ததை அடுத்து அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments