உலக தாய்மொழி தினம் - முதலமைச்சர் வாழ்த்து!
ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாய்மொழியை போற்றும் விதமாக, பிப்ரவரி மாதம் 21-ந் தேதி உலக தாய் மொழி தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தங்களது மொழிகளை பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது வழியில், ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் எனவும், அனைவருக்கும் சமமானதாக இந்தியாவை மாற்ற அனைவரும் உறுதியேற்போம் எனவும் கூறியுள்ளார்.
Comments