இந்தியாவில் புதிதாக 16,051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்றும் குறைந்து 16 ஆயிரத்து 51 ஆக பதிவாகி உள்ளது.
ஒரே நாளில் கொரோனா பாதித்த 206 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 37 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 93 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 131 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
Comments