ஒடிசாவில் 27 பெண்களைத் திருமணம் செய்த 'கல்யாண மன்னன்' மீது குவியும் புகார்கள்

0 3425

பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி மணமுடித்த நபரை ஒடிசாவில் 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்யப்பட்ட நபர் குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

புவனேசுவரில் வாடகைக் காரில் போய்க் கொண்டிருந்த பிபு பிரகாஷ் என்பவரை திடீரென போலீசார் சுற்றி வளைத்து இழுத்துச் சென்றனர். 5 புள்ளி 2 அடி உயரம் சாதாரண தோற்றம் டிரிம் செய்த மீசையுடன் காட்சியளிக்கும் 66 வயதான இந்த நபர் போலீசாருடன் முரண்படாமல் புன்னகையுடன் சரண் அடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பெண்களை பணத்துக்காக மணம் முடித்து இருப்பதும் கேரளாவில் 13 வங்கிகளிடம் சுமார் ஒருகோடி ரூபாய் மோடி செய்ததும் 128 போலி கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதும் தெரிந்து போலீசாரே அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

ஹைதராபாதில் எம்.பிபிஎஸ் படிப்புக்கு இடம் பிடித்து தருவதாக சுமார் 2 கோடி ரூபாய் வசூலித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த 8 மாதங்களாக அவனை கண்காணித்து வந்த போலீசார் ஒரு பெரிய மோசடிப் பேர்வழியை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments