மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4ஆயிரம் அஞ்சல் அட்டைகள்

0 1597

மகாராஷ்டிராவில் மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.  அந்த மாநிலத்தில் வருகிற  27ஆம் தேதி மராத்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments