திரைப்பட விருது விழா.! புஷ்பா படத்திற்கு கடந்த ஆண்டுக்கான சிறந்த படமாக தாதா சாகேப் பால்கே விருது

0 6213

தெலுங்கில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா நடித்து பல்வேறு இந்திய மொழிகளில் வெளியான புஷ்பா படத்திற்கு கடந்த ஆண்டுக்கான சிறந்த படமாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் விருது பழம்பெரும் நடிகை ஆஷா பாரேக்கிற்கு வழங்கப்பட்டது

83 படத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிகராகவும், மிமி படத்தில் நடித்த கீர்த்தி சனோன் சிறந்த நடிகையாகவும் விருது பெற்றனர். சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட இளம் நட்சத்திரங்களுக்கு விமர்சகர்களின் விருது அளிக்கப்பட்டது.

ஷேர்ஷா சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments