மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி.... தொடரை முழுமையாகக் கைப்பற்றி அபாரம்!

0 4367

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டும் சேர்த்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 61 ரன்கள் சேர்த்தார். இந்திய வீரர் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments