ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் சென்றடைந்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்து மூன்று நாள் பயணமாக பிரான்சுக்கு சென்றுள்ளார்.
பாரிஸ் விமான நிலையத்தில் அவருக்கு தூதரக அதிகாரிகளால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரன், அமைச்சர்கள், உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சாஃப்ரான் விமான எஞ்சின்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தைப் பகிர்வதற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடுவார்.
இந்தியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிரான்ஸ் உதவி வருகிறது. ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சர்களின் இந்தோ பசிபிக் தொடர்பான மாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்று உரை நிகழ்த்துவார். பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
Comments