தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடக்கம்

0 4308

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி அமைப்புகளில் உள்ள 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

வாக்கு எண்ணும் மையங்களில் எந்திரத் துப்பாக்கியுடன் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பெட்டிகள் இருக்கும் கட்டடங்களை சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் சுற்று பகுதிகள் அனைத்தையும் கண்காணிக் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு மாநில தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறை மற்றும் போலீஸ் கட்டுப்பாடு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகள் 268 மையங்களில் வைத்து எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் அறைகளில் தலா 14 மேஜைகள் போடப்பட்டு, அந்த மேஜைகளை சுற்றிலும் கம்பி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

வாக்கு எண்ணும் அறைகளில் அலுவலர்கள், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் உள்ளிட்டோர் அமர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து முடித்து தயார்நிலையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments