திமுகவினர் மீது குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
கோவையில் திமுகவினர் மீது குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 9 அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மற்றும் சென்னை பகுதி ரௌடிகளை களமிறக்கி திமுகவினர் பண விநியோகம் செய்தனர் என்றும் கள்ள ஓட்டு செலுத்தினர் என்று குற்றம்சாட்டினார்.
நீதிமன்ற அறிவுறுத்தல்களை அதிகாரிகள் கடைபிடிக்க வில்லை என்று கூறிய அவர், இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டதாகக் கூறினார்.
Comments