உயர் ரக பூனை திருட்டு... விஜய்யின் மாஸ்டர் படம் காரணமா?

0 3449

புதுச்சேரியில் விலை உயர்ந்த பெர்ஷியன் ரக பூனையை திருடியவர்கள், அந்த காட்சிகள் பரவியதை அடுத்து யாருக்கும் தெரியாமல் கடைக்கு அருகிலேயே வைத்து விட்டு சென்றனர்.

முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகே உள்ள ஜெயக்குமார் என்பவரது கடைக்கு கடந்த 18 -ஆம் தேதி இரவு வந்த 3 பேர், கடையில் இருந்தவர்களின் கவனத்தை திசை திருப்பி,  வெளியே சுற்றித்திரிந்த பூனையை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

அந்த பூனையின் மதிப்பு 15 முதல் 20 ஆயிரம் ருபாய் வரை இருக்கக்கூடும் என கூறப்படும் நிலையில்,ஜெயக்குமார் போலீஸில் புகார் அளித்ததோடு, சிசிடிவி காட்சிகளையும் இணையத்தில் பகிர்ந்தார்.

இதனிடையே திருடியவர்கள் கடைக்கு அருகிலேயே பூனையை விட்டுச் சென்றதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய், பெர்சியன் ரக பூனையை வளர்ப்பது போல நடித்திருந்த நிலையில்,அதே போன்ற பூனையை பார்த்ததும் சிலர் திருட முயன்றிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments