பஞ்சாபில் 117 தொகுதிகளிலும் , உ.பி. யில் 59 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு
பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக 59 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இருமாநிலங்களில் அமைதியான முறையில் மக்கள் வாக்களித்துச் சென்றதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையேயும், உத்தரபிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையேயும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் 64 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 59 சதவீதமும் வாக்குப் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தேதியில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Comments