பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கமல் அறிக்கை

0 6804
பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கமல் அறிக்கை

ஓ.டி.டியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை அடுத்த வாரம் முதல் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கமல், தாம் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஓடிடி நிறுவனத்தின் முழு ஒத்துழைப்போடு விலகுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது மிகச் சிறிய தற்காலிக இடைவெளிதான் என்றும் மிக விரைவில் பிக்பாஸ் 6வது சீசனில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments