இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதி

0 2482

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ராணியின் அதிகாரப்பூர்வ இல்லமான பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் இதுகுறித்து விடுத்துள்ள செய்தி குறிப்பில், 95 வயதான ராணிக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருதவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் ராணிக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மிக லேசான அறிகுறிகள் இருப்பதாலும், தமது கடமைகளில் எளிய பணிகளை ராணி தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணியின் மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லசுக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், அவரை ராணி சந்தித்தார் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments