நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 43.65சதவீத வாக்குகள் பதிவு ; மாநில தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 43.65சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்ட நிலையில், 200 வார்டுகளிலும் மொத்தமாக 43.65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக சென்னையில் மணலி மண்டலத்தில் 17ஆவது வார்டில் 84சதவீதம் வாக்குகளும், திருவொற்றியூர் மண்டலத்தில் ஒன்றாவது வார்டில் 72.09 சதவீதம் வாக்குகளும், ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட 159 ஆவது வார்டில் 71.20சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 133ஆவது வார்டில் 31 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
Comments