அரசு செவிலியர் இரும்புக் கம்பியால் கொடூரமாக அடித்துக் கொலை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடும்பத் தகராறில் அரசு செவிலியர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.
வயலூரைச் சேர்ந்த வளர்மதி என்பவர், பாப்பக்காப்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தில் கிராம செவிலியராக பணிபுரிந்து வந்தார். சனிக்கிழமை மதியம் கோடங்கிப்பட்டி ஒத்தக்கடை அருகே விவசாய நிலத்தில் உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அவ்வழியாகச் சென்றவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வளர்மதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஓராண்டுக்கு முன் வளர்மதியின் மருமகளான பிரீத்தி என்பவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கு வளர்மதிதான் காரணம் என பிரீத்தி குடும்பத்தினர் அவர் மீது கோபத்தில் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
வளர்மதியின் மகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரீத்தி குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
Comments