வாக்குப்பதிவு மையம் ஒன்றில், அத்துமீறி நுழைய முயன்றதாக நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல்
பஞ்சாப்பில் வாக்குப்பதிவு மையம் ஒன்றில், அத்துமீறி நுழைய முயன்றதாக நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப்பில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சோனு சூட்டின் தங்கை, மால்விகா, காங்கிரஸ் சார்பில் மோகா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நடிகர் சோனு சூட், மேகா தொகுதியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தை பார்வையிடுவதாக கூறி வந்துள்ளார்.
அப்போது, அவர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததாக சோனு சூட் காரை பறிமுதல் செய்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கூறியுள்ள நடிகர் சோனு சூட், சில இடங்களில் பண பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலின் பேரில் தான் வாக்குச்சாவடிக்கு வந்ததாகவும், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திருக்கிறார்.
Comments