உத்தரப்பிரதேசம் இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலமாக திகழ பாஜக தீவிரமான நடவடிக்கை எடுக்கும் - மத்திய அமைச்சர் அமித் ஷா

0 1436

உத்தரப்பிரதேசம் இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலமாக திகழ பாஜக தீவிரமான நடவடிக்கை எடுக்கும் என்று வாக்காளர்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

லக்னோவில் பேசிய அவர், கல்வியிலும் வளர்ச்சியிலும் இம்மாநிலத்தை மேம்படுத்தப்படும் என்று கூறினார். ஒரு குடும்பம் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியினரால் ஒரு மாநில அரசு நடத்தப்படும் போது ஒட்டுமொத்த மக்களும் துன்புறுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

அரசு அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியைக் குறிக்கோளாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY