அமெரிக்காவில் திடீரென கடற்கரையில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்து.!

0 2442

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மியாமி கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொது மக்கள், மற்றும் ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவர்கள் அருகே ராபின்சன் நிறுவனத்தின் ஆர் 44 இலகு ரக ஹெலிகாப்டர் விழுந்தது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று பேரில் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments