நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உத்தேசமாக 60 புள்ளி 70 சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்

0 1825

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உத்தேசமாக 60 புள்ளி 70 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடைபெற்றது.

சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 57,ஆயிரத்து 746 பேர் போட்டியில் உள்ளனர்.

தேர்தல் பணியில 1 லட்சம் 32 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு லட்சத்து 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக சுமார் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பேரூராட்சிகளில் மொத்தம் 74.68 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் மொத்தம் 68.22 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநகராட்சிகளில் மொத்தம் 52.22% வாக்குகள் பதிவாகி உள்ளன. மாநகராட்சிகளில் அதிக பட்சமாக கரூர் மாநகராட்சியில் 75.84 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மிக குறைந்த அளவாக சென்னை மாநகராட்சியில் மொத்தம் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட அளவில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 % வாக்குகள் பதிவாகியுள்ளன. வருகிற 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments