வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் கைது.!
மதுரை மாவட்டம் மேலூரில் வாக்குச்சாவடி மையத்தில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் அல்- அமீன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தனர்.
அப்போது, முகத்தை காட்டாமல் வாக்களிக்க அனுமதிப்பதாக கூறி பா.ஜ.க. முகவர் கிரிநந்தன், ஹிஜாப்பை கழற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கிரிநந்தனிடன் விசாரணை நடத்திய போலீசார், மத உணர்வுகளை புண்படுத்த முயற்சித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Comments