தவறு சரிசெய்யப்பட்ட பின் வாக்களித்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன்
சென்னை அண்ணாநகரில் வாக்குச்சாவடி அலுவலரின் கவனக்குறைவால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக தகவல் வெளியான நிலையில், பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சென்னை அண்ணாநகர் கிழக்கு , குஜ்ஜி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்யவிருந்தார்.
ஆனால் அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். அதனை அறிந்து கரு நாகராஜன் , கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் வாக்குச்சாவடி முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.
பின்னர் நடத்திய ஆய்வில் வாக்குச்சாவடி அலுவலர்களில் ஒருவர் வரிசை எண்ணை மாற்றி டிக் செய்ததால் ஏற்பட்ட குழப்பம் என்பது தெரியவந்தது. அதனையடுத்து எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Comments