எஸ்.பியை அவமதிக்கும் வகையில் பேசியதாக ராணுவ வீரரை கைது செய்த போலீசார்..
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை அவமதிக்கும் வகையில் பேசியதாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில், திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலச்சம்பாளையம் 26வது வார்டுக்கான வாக்குப்பதிவு அங்குள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியில் கூட்டமாக நின்றவர்களை எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தலைமையிலான போலீசார் கலைந்து செல்லும்படி கூறியுள்ளனர்.
அப்போது திமுக வேட்பாளரின் சகோதரரும் ராணுவ வீரருமான பாண்டிகணேஷ் என்பவர், எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் வை மரியாதை குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து வேனில் ஏற்றினர். ஆத்திரமடைந்த திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.எஸ்.செல்வகணபதி என்பவர் வந்து சமாதானம் செய்ததும் அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments