பிரதமர் மோடியைச் சந்தித்த ஆப்கான் சீக்கிய , இந்துப் பிரதிநிதிகள்.!
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சீக்கிய , இந்துப் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததும் அங்கு அச்சுறுத்தலுக்குள்ளான மதச் சிறுபான்மையரான சீக்கியர்களும், இந்துக்களும் இந்தியாவுக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.
அப்படி அகதிகளாக வந்தவர்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் எனப் பிரதமரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Comments