துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா மிர்சா - ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி.!
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - செக் குடியரசை சேர்ந்த லூசி ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வியடைந்தது.
துபாயில் நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் லாட்வியாவின் எலெனா ஓஸ்டாபென்கோ - உக்ரைனின் லியூட்மிலா கிச்சனோக் ஜோடியை எதிர்கொண்ட சானியா - ஹிரடெக்ஸ்கா ஜோடி, 6-2 என்ற செட் கணக்கில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த போதிலும் அடுத்த 2 செட்களிலும் 2-6, 7-10 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்தது.
Comments