நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தள்ளாத வயதிலும் தவறாமல் வந்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்.!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
புஞ்சை புளியம்பட்டியில், 100 வயதான மூதாட்டி தள்ளாத வயதிலும் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். உளுந்தூர்பேட்டையில் 93 வயதான மூதாட்டி தனி ஆளாக வந்து வாக்களித்தார்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள பசுமலை பகுதி வாக்குச்சாவடியில் 90 வயதான முதியவர் ஆட்டோவில் வந்து வாக்கு செலுத்தினார். பெருமகளூரிலும், கீழ்வேளூரிலும் 90 வயதான மூதாட்டிகள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மணப்பாறையிலும் வந்தவாசியிலும் மாற்றுத்திறனாளிகளும் முதியவர்களும் வீல் சேரில் சென்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
அவர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் வாக்களிக்க உதவினர். இதற்கிடையில், தூத்துக்குடி மாநகராட்சியின் 20வது வார்டில் நரிக்குறவர் இன மக்கள் சிலர், முதன்முறையாக வாக்களித்தனர். இதே போல, விருத்தாசலத்திலும் நரிக்குறவர் இன மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
Comments