ஆப்கானிஸ்தானில் ஆழ்துளைக்கிணற்றில் 10 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் உயிரிழப்பு.!

0 1689

ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தான்.

வறண்ட கிராமமான ஷோக்காக்கில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சிறுவன் ஹைதரின் தாத்தாவான ஹாஜி ஆழ்துளைக்கிணறு தோண்டும் இடத்தில் சில உதவிகளை செய்து வந்துள்ளார்.

அப்போது சிறுவன் அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது 25 மீட்டர் ஆழமுடைய அந்த ஆழ்துளை கிணற்றில் 10 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான். ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் சிறுவனை கயிறு மூலமாக மீட்க செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தததையடுத்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்று ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டி கிட்டத்தட்ட 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று மதியம் மீட்கப்பட்டான்.

மீட்கப்பட்ட சில நிமிடங்களிலெயே சிறுவனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. பின்னர்  ஹெலிக்காப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments