100 கிரான் டிரோன்கள் தொடக்கி வைத்த பிரதமர்.. 1 இலட்சம் டிரோன்கள் 2 ஆண்டில் தயாரிக்க இலக்கு.!
வேளாண்துறையை நவீனப்படுத்த நூறு கிசான் டிரோன்களைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு இலட்சம் டிரோன்களைத் தயாரிக்க இலக்கு வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
வேளாண்மையை நவீனப்படுத்த விதைத்தல், உரங்கள் தூவுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல் ஆகிய பணிகளில் விவசாயிகளுக்கு உதவியாக டிரோன்கள் பயன்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ் நாட்டின் ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, விழுப்புரம், கடலூர், சேலம், திருவாரூர், கரூர் மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நூறு கிசான் டிரோன்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுக் காணொலியில் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 21ஆம் நூற்றாண்டில் வேளாண்மையை நவீனப்படுத்தும் திசைவழியில் இது புது முயற்சி எனக் குறிப்பிட்டார். இது டிரோன் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் மட்டுமல்லாமல் வரம்பற்ற சாத்தியக்கூறுகளுக்கு வானத்தைத் திறக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு இலட்சம் டிரோன்களைத் தயாரிக்க இலக்கு வைத்துச் செயல்படும்படி கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் தான் கூறியுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாவதுடன், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.
Comments