ரயில் நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விரைவு ரயிலின் காலிப்பெட்டி
பீகாரின் மதுபானி நிலையத்தில் நின்றுகொண்டிருந்த விரைவுரயிலின் காலிப்பெட்டிகளில் தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர், ரயில்வே பணியாளர்கள் இணைந்து போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர்.
புதுடெல்லிக்கும் பீகார் மாநிலம் ஜெய்நகருக்கும் இடையே இயங்கும் விரைவு ரயிலின் காலிப்பெட்டிகள் மதுபானி ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று காலையில் அந்த ரயிலின் காலிப் பெட்டிகளில் திடீரெனத் தீப்பற்றியது.
அதைப் பார்த்த ரயில்வே பணியாளர்கள் தண்ணீரை ஊற்றிக் கட்டுப்படுத்த முயன்றனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து போராடித் தீயை முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Comments