தங்கக் கடத்தல் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வப்னா சுரேஷ் தொண்டுநிறுவனத்தின் இயக்குனராக நியமனம்
கேரளாவின் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு, பெங்களூரில் கைதாகி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வப்னா சுரேஷ் தொண்டுநிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் நல்வாழ்வுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குனராக நேற்று அவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழாவில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள். ஸ்வப்னா சுரேஷ் மீது குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
வழக்கு விசாரணையில் உள்ளது.அவர் தமது குழந்தைகளுடன் அன்றாட வாழ்வுக்கு சிரமப்படுவதைத் தவிர்க்க அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஸ்வப்னா சுரேஷூக்கு 43 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Comments