இந்தியா - ஐக்கிய அரபு சுதந்திரமான வர்த்தகம் மூலமாக 100 மில்லியன் டாலர் இலக்கு
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் நேற்று சுதந்திரமான வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதனால் அடுத்த ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலர் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் மாரி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னதாக பிரதமர் மோடியுடன் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின்சையத் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாத எதிர்ப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கருத்துகளை பரிமாறிக் கொண்ட இரு தலைவர்களும் நட்பை பலப்படுத்தவும் கூட்டாக பல்வேறு வர்த்தகங்களை மேற்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
Comments