மகள்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

0 2186
மகள்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

கடலூரில் பெற்ற மகள்களை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முட்டம் பெரிய காலனியைச் சேர்ந்த சசிகலா கடந்த 2018-ஆம் ஆண்டு தனது 4 வயது மற்றும் 3 மாத மகள்களை கொலை செய்ததுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

2-ஆவது மகள் பிறந்தது முதல் சசிகலாவுக்கு எது சாப்பிட்டாலும் வாந்தி வந்துக்கொண்டே இருந்ததாகவும், எவ்வளவு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காததால் தற்கொலை செய்ய முடிவெடுத்து, குழந்தைகளையும் கொல்ல முடிவெடுத்ததகாவும் கூறப்படுகிறது.

இதில் சசிகலாவை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றிய நிலையில், சசிகலாவின் மாமியார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக சசிகலாவுக்கு ஒரு கொலைக்கு ஒரு ஆயுள் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments