ரஜினியின் சிலையை களிமண்ணில் வடிவமைத்த இளைஞருக்கு நடிகர் ரஜினி பாராட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே களிமண்ணால் தனது சிலையை வடிவமைத்த இளைஞருக்கு, நடிகர் ரஜினி ஆடியோ மெசெஜ் அனுப்பி பாராட்டு தெரிவித்துள்ளர்.
மண்பாண்டக் கலைஞரும் ரஜினியின் தீவிர ரசிகருமான, 21 வயது இளைஞர் ரஞ்சித், ரஜினியின் விதவிதமான உருவங்களை களிமண்ணால் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
சில ஆண்டுகளுக்கு முன், தான் செய்த ரஜினி சிலையுடன் சென்னை சென்ற ரஞ்சித், ரஜினியை நேரில் சந்தித்து சிலையை அவரிடம் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், ரஜினியின் மார்பளவு சிலையை வடித்த ரஞ்சித், அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோ வைரலான நிலையில் அதனைப் பார்த்த நடிகர் ரஜினி, ரஞ்சித்திற்கு ஆடியோ மெசேஜ் அனுப்பி பாராட்டியுள்ளார். நிச்சயம் ஒரு நாள் நேரில் சந்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments