அச்சமின்றி வாக்களிக்க முன்வர வேண்டும் : மாநில தேர்தல் ஆணையர் வேண்டுகோள்

0 1881

நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தமிழகத்தில் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 6 வார்டுகளில் வேட்பாளர்கள் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் பணியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளதாக கூறினார்.

கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அங்கு 3 கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தாப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் சான்றிதழை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

பதற்றமானதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என்றும் பணப்பட்டுவாடா நடைபெறுவது குறித்து தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழனிகுமார் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments