திருச்சி - திருப்பதி இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்

0 1807
திருச்சி - திருப்பதி இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திருச்சி - திருப்பதி இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது.

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி முதல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவையை தொடங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இதேபோன்று திருப்பதியிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்கு திருச்சி விமானநிலையத்தை வந்தடையும் என இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments