கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
6 அணுமின் உலைகளிலிருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, சேமிக்கும் வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டிருப்பதாக அவர் கடித்ததில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணு எரிபொருள் கழிவுகளை ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் இது சாத்தியப்படாவிடில், மக்கள் வசிக்காத பகுதியில், நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு அமைத்து கழிவுகளை சேமிக்கலாம் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments