தேசிய பங்குச்சந்தை விவரங்களை கசியவிட்டதாக குற்றச்சாட்டு : சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
தேசிய பங்குச்சந்தை விவரங்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட அதன் முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு முதல் 2016 வரை மேலாண் இயக்குநராக பணியாற்றிய அவர், பங்குச்சந்தை குறித்த தகவல்களை இமயமலையில் உள்ள சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், தனது ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியனை நியமித்ததில் விதிமீறல் உள்ளதாகவும் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து சித்ரா தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், சிபிஐ அதிகாரிகள் இன்று அவரிடம் மும்பையில் விசாரணை மேற்கொண்டனர்.
சித்ரா, தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் சிஇஓ ரவி நாராயண் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதை தடுக்கும் நோக்கில் சிபிஐ அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பித்துள்ளனர்.
Comments