காஞ்சிபுரம் ரவுடி சங்கரின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்

0 2082
காஞ்சிபுரம் ரவுடி சங்கரின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பிபிஜிடி சங்கரின் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.

சங்கர் மீது ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போலீசார் பதிவு செய்த வழக்கு ஒன்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சில ஆண்டுகளுக்கு முன் சோதனை நடத்தினர்.

இதில், சங்கரின் பினாமி பெயரில் 79 சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த சொத்துக்கள் அனைத்தையும் அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு உட்பட்ட வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக சங்கர் பதவிவகிப்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments