இனி நேபாளத்திலும் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை அறிமுகம்

0 1558

ந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை, அண்டை நாடான நேபாளத்திலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதற்காக, NPCI எனப்படும் இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம், நேபாளத்தில் உள்ள Gateway Payments Service மற்றும் Manam Infotech ஆகிய நிறுவனங்களுடன் கைக்கோர்த்துள்ளது.

இதன் மூலமாக, நேபாளத்தில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 940 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 3,900 கோடி பரிவர்த்தனைகள் யு.பி.ஐ மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வெற்றிகரமாக செயல்படும் இந்த யு.பி.ஐ சேவையை நேபாளத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம், நேபாளத்தின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மாற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் எனவும் வணிகங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் NPCI தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments