உ.பி தேர்தல் : 3ம் கட்டத்தில் போட்டியிடும் 245 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள், 135 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் - தேர்தல் ஆய்வுக்குழு
உத்திர பிரதேசத்தின் மூன்றாம் கட்ட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் 245 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.
உ.பி சட்டமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், வரும் 20ம் தேதி 59 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அதில், 627 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 245 வேட்பாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆய்வுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும், மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 135 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் என்றும் கூறியுள்ளது.
Comments