கோவை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்

0 2352
கோவை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கண்காணிப்பு பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தவும், தேர்தல் பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து கோவையில் வந்து தங்கியிருப்போரை வெளியேற்றவும், அதிமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தரையில் படுத்துக் கொண்டு அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments